கர்நாடகாவில் பாஜக கட்சி தோல்வி அடைந்த நிலையில் அங்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலையை பலரும் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் பாஜக அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்து டுவிட்டர் பதிவுகளை போட்டு வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில், கர்நாடகாவில் நம்ம ஆளு பிரச்சாரம் செய்த ஒரு தொகுதியில் 10 வாக்குகள் விழுந்தது என்பது தவறு. 4 வாக்குகள் தான் விழுந்துள்ளதாம்.

இதுதான் இன்றைய பழமொழி. உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதேபோன்று தான் பதிவிட்ட டுவிட்டர் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டு சிங்கத்தை மேலும் அவமானப்படுத்தும் டியர் வார்‌ரூம் கத்துக்குட்டிகளா, நான் பாராட்டி தான் சொன்னேன். அரவக்குறிச்சியில் பூத் 214-ல் பதிவான 927 வாக்குகளில் ஒத்த ஓட்டு வாங்குன சிங்கம் கர்நாடகாவில் ஒதுக்கப்பட்ட பூத்தில் 4 வாக்குகள் வாங்கியது முன்னேற்றமே என்று பதிவிட்டுள்ளார்.