
மலையாள நடிகை ரீமா கல்லிங்கல், பாடகி சுசித்ரா மீது கொச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், சுசித்ரா தனது பேட்டியில், நடிகை ரீமா கல்லிங்கல் போதை மருந்து விருந்துகளை நடத்தியதன் காரணமாகவே திரைத்துறையில் அவரது கேரியர் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதற்கு எதிராக, ரீமா கல்லிங்கல் உடனடியாக சுசித்ராவின் பேச்சு முழுமையாக பொய்யானது எனக் கூறி, கொச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது பெயரையும், நற்பெயரையும் கெடுப்பதற்காக சுசித்ரா இவ்வாறு பேசியுள்ளார் என்று ரீமா தனது புகாரில் குறிப்பிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.