பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் போது மலேசியாவுடன் ஒன்றிணைந்த நாடாக சிங்கப்பூர் இருந்தது. அந்த காலகட்டத்தில் சுமார் 124 ஹெக்டேர் பரப்பில் பறந்து விரிந்த குதிரைப் பந்தயம் மைதானத்தை அமைத்தனர். சுமார் 182 வருடங்களாக அந்த மைதானத்தில் குதிரை பந்தயம் நடக்கிறது. தற்போது சிங்கப்பூர் தனி நாடாக மாறி எண்ணிப் பார்க்க முடியாத அளவு வளர்ச்சி அடைந்துள்ளது.

அங்கு வசிக்கும் மக்கள் வீடு கட்டுவதற்காக நிலம் தேவைப்படுகிறது. இதனால் சிங்கப்பூர் அரசு தற்போது வீடு கட்டுவதற்கு குதிரை பந்தயம் மைதானத்தை பயன்படுத்தலாம் என முடிவு செய்தது. இன்று கிராண்ட் சிங்கப்பூர் கோல்ட் கோப்பைக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியோடு சுமார் 182 ஆண்டு கால குதிரைப் பந்தயம் முடிவுக்கு வந்தது.