ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினரும் சமூக வலைதளங்களில் லைம்லைட்டில் இருந்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹாலின் மனைவி தனஸ்ரீ வர்மா மற்றும் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் தங்கை ஸ்ரேஸ்தா ஐயர் இருவரும் இணைந்து புகழ்பெற்ற ஹரியான்வி பாடலான “ஷீஷா” பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இருவரும் மிகச் சிறப்பாகத் தாளத்திற்கு ஏற்ப ஆடியுள்ள இந்த வீடியோ, பதிவேற்றிய சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இருப்பினும், இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர் பழைய நினைவுகளைத் தோண்டி எடுத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Dhanashree Verma made a reel with Shreyas Iyer’s sister.
When Dhanashree was with Yuzvendra Chahal, she used to make reel with Shreyas Iyer. So, she knows Shreyas and his family from that time probably.
Stay safe and focused Shreyas Iyer. ODI WC is just around the corner. pic.twitter.com/6ywn1q0PeM
— Incognito (@Incognito_qfs) April 11, 2026
முன்னதாக தனஸ்ரீ, ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து பல டான்ஸ் ரீல்ஸ்களைப் பதிவிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி வரும் ரசிகர்கள், கிண்டலாக சில கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதே சமயம், சில ரசிகர்கள் அடுத்ததாக வரவிருக்கும் 2027 ஐசிசி உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.
ஸ்ரேஸ்தா ஐயர் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்றவராக இருக்கும் நிலையில், தற்போது தனஸ்ரீயுடன் அவர் இணைந்து ஆடியுள்ள இந்த வீடியோ ஐபிஎல் ரசிகர்களிடையே ஒரு சுவாரஸ்யமான விவாதத்தையே கிளப்பியுள்ளது.
