
பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்துக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. அதாவது கடந்த 2021ம் ஆண்டு வாட்ஸ்அப் தனி உரிமை கொள்கைகள் மாற்றப்பட்டது. அதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்கில் கொடுத்து சமூக வலைதளச் சந்தையின் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டு உள்ளது. இதற்கு இந்திய போட்டி ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் மற்ற சமூக வலைதளம் வணிக ரீதியான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு மெட்டா நிறுவனத்திற்கு 213.14 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து நியாயமற்ற இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தற்போது இருக்கும் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் இந்த உத்தரவை மெட்டா நிறுவனம் எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக இந்திய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.