இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளரான முகமது ஷமி, தனது காயம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பு தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில், ஷமி காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என்ற செய்தி பரவியதை நிராகரித்து, தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் போது, காயத்தில் இருந்து குணமடைய தீவிர சிகிச்சையும், பயிற்சியும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னைப் பற்றிய எந்த செய்திகளையும் தான் உறுதிப்படுத்தவில்லை என்றால், அதை நம்ப வேண்டாம் என ரசிகர்களையும் ஊடகங்களையும்  கேட்டு கொண்டார்.