தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷ்ணுகாந்த். இவர் சீரியல் நடிகை சம்யுக்தாவை காதலித்து வந்த நிலையில் நேற்று இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா சேர்ந்து நடித்திருந்தனர்.

அப்போது இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் சமீபத்தில் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை விஷ்ணுகாந்த் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த ஜோடிகளுக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.