தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சோனு சூட் . இவர் பாலிவுட், சீனா, ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கொரோனா காலகட்டத்தின் போது மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்தார். சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தட்டுக்கு சோனு சூட்டின் பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சோனு சூட் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, நான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், சீனா, மராத்தி மற்றும் கன்னடா உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.

அந்த படங்கள் அனைத்தும் வெற்றி அடைந்தது. எனக்கு கொரோனா காலகட்டத்தின் போது தான் பொதுமக்களுடன் இணைய வாய்ப்பு கிடைத்தது. அந்த மக்களை இதற்கு முன்பு நான் சந்தித்ததோ இதற்குப் பிறகு சந்திக்க போவதோ கிடையாது. அந்த சமயத்தில் நான் அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ மகிழ்ச்சியை கொண்டு வந்ததால் எனக்கு நிறைய ஆசீர்வாதம் கிடைத்தது. இதன்மூலம் வெற்றி எப்படி இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். நான் சினிமாத்துறையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். ரூ. 500 மற்றும் 1000 கோடி ரூபாய் திரைப்படங்களில் கூட நீங்கள் நடிக்கலாம். ஆனால் ஒருவருக்கு உதவி செய்யும்போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சி அந்த படங்களில் நடிக்கும் போது கிடைக்காது என்று கூறியுள்ளார். மக்களுக்கு உதவுவதன் மூலமாக அதிக திருப்தி கிடைக்கிறது என்றும் கூறினார்.