அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக கோரி ஆளுநர் கடிதம் எழுதி இருந்ததாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மே 31ஆம் தேதி ஆளுநர் ரவி, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்ததாகவும், ஜூன் 1ஆம் தேதியே முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதில் கடிதம் எழுதி இருந்ததாகவும் பொன்முடி கூறியுள்ளார். வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அமைச்சரை நீக்க முடியாது என முதல்வர் பதில் சொல்லிருந்தார் என பொன்முடி கூறினார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியிடம் இலாகா இல்லாவிட்டாலும் அமைச்சராகவே தொடருவார் என்று அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் அவர் பாஜக முகவராக செயல்படுகிறார் என்றும் பொன்முடி கடுமையாக விமர்சித்துள்ளார். வழக்குகள் நிலுவையில் இருப்பதாலேயே அமைச்சரை நீக்க முடியாது என்றும் பொன்முடி கூறினார்.