இந்த நூற்றாண்டின் கடல் மட்ட உயர்வு, சில ஆசிய பெரு நகரங்கள், மேற்கு வெப்பமண்டல பசிபி தீவுகள் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என்று ஒரு புது ஆராய்ச்சி கூறுகிறது.

அதோடு சென்னை, கொல்கத்தா, யாங்கூன், பாங்காக், ஹோ சி மின் நகரம், மணிலா உள்ளிட்ட பகுதிகள், இதே போன்று பசுமை இல்ல வாயுக்களை தொடர்ந்து வெளியிடும் பட்சத்தில் 2100-ஆம் ஆண்டளவில் குறிப்பிடத்தக்க அபாயங்களை எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு ஆசிய பெருநகரங்களை ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.