சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு மதுரையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச சிறு தானிய திருவிழா மார்ச் 6 மற்றும் 7-ம் தேதிகளில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சிறுதானிய ஆண்டினை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் விதமாக இந்த திருவிழா நடைபெற இருக்கிறது. சிறுதானியங்களின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது திருவிழாவின் நோக்கம்.

அதன்பிறகு இந்த திருவிழாவில் சிறுதானியங்கள் சார்ந்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் விதமாக 125 அரங்குகள் அமைக்கப்பட இருக்கிறது. இந்த சிறுதானிய திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வேளாண் பல்கலைக்கழகத்தில் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், த.மோ அன்பரசன் மற்றும் மூர்த்தி போன்றோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சியில் 6000 கல்லூரி மாணவர்கள் பார்வையாளர்களாக பங்கேற்க இருக்கிறார்கள்.