
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் நடித்துள்ள தி கோட் படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து தளபதி 69 படத்தில் எச். வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் நடிகர் விஜய் கையில் தீப்பந்தத்தை ஏந்தி இருக்குமாறு ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் இது ஜனநாயகத்தை காப்பதற்கான தீப்பந்தம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த நிலையில் தளபதி 69 ஒரு அரசியல் படமாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படம் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தற்போது தளபதி கையில் ஏந்தி உள்ள தீப்பந்தம் குறித்து பல்வேறு விதமான கேள்விகள் எழுந்துள்ளது.
அதாவது நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் தீப்பந்தம் இருக்கிறது. அதே தீப்பந்தம் தான் தளபதி 69 பட போஸ்டரிலும் உள்ளது. ஏற்கனவே தி கோட் படத்தில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் வர வைத்துள்ளனர். இதன் மூலம் விஜயகாந்த் அரசியலை நடிகர் விஜய் கையில் அடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார். ஆனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அப்படியே தேமுதிக கட்சி பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று கூறப்படும் நிலையில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களும் இருக்கிறார்கள். மேலும் இதே நிலையில் தற்போது விஜயகாந்த் பாணியில் விஜய் அரசியலை முன்னெடுத்து செல்கிறார் என்று கூறப்படும் தகவல் கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறி உள்ளது.