
உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் புனித தலங்களை பார்வையிட பீகாரிலிருந்து 3 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் கங்கை நதியின் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற சோனா சிங் என்ற மருத்துவ மாணவி எதிர்பாராத விதத்தில் ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.
இவரைக் காப்பாற்றுவதற்கு இவருடன் வந்த இவரது நண்பர்கள் ரிஷி மற்றும் வைபவ் சிங் இருவரும் ஆற்றில் குதித்துள்ளனர். ஆனால் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருந்ததால் 3 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வைபவ் சிங் என்ற இளைஞரின் உடலை மட்டும் மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மற்ற 2 பேரின் உடல்களையும் காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்ததுடன் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.