கடந்த 2023ம் ஆண்டு ஜெயகாந்த் என்பவர் இலங்கையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பெண்ணின் நாட்டில் இருந்து சென்னைக்கு வரும்போது விமான நிலையத்தில் பெண்ணின் தாலி, வளையல்கள் அதிக எடை இருப்பதாக சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து ஜெயகாந்த் அந்த நகைகளை திரும்ப வழங்கக்கோரி வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுமண பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.