உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரில் பல திருப்பங்களை நாம் பார்த்து வரும் நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு பீரங்கிகளை தருவதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்கா எம்-1 ஆப்ராம்ஸ் வகை பீரங்கிகளும் ஜெர்மனி லியோ பாத் 2 வகை பீரங்கிகளும் உக்கிரனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். போர்க்களத்தில் இந்த இரண்டு பீரங்கிகளுக்கும் முன்பாக எதுவும் நிற்க முடியாது என்றே கூறலாம்.

ஜெர்மனியின் பீரங்கி 1979 ஆம் ஆண்டு இதன் வடிவமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில் இன்றளவும் தொழில்நுட்பத்திலும் ஆயுதத்திலும் பல முன்னேற்றங்களைக் கொண்டு போர்க்களத்தில் சிறந்த பீரங்கியாக திகழ்ந்து வருகின்றது. மணிக்கு 72 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இவை டீசல் மூலமாக இயங்க கூடியவை.

மேலும் இதில் ஒரு முறை எரிபொருளை நிரப்பினால் சராசரியாக 500 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யக்கூடியவை. அமெரிக்காவின் பீரங்கி 1978 ஆம் ஆண்டு ஒரு இயக்கவியல் நில அமைப்புகள் உருவாக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டு அமெரிக்கா ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பங்களையும் ஆயுதங்களையும் கொண்டிருப்பதால் இவை உலகத்தில் சிறந்த பீரங்கியாக விளங்கி வருகின்றது.

மணிக்கு 67 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இவை விமான எரிபொருளால் இயங்கக்கூடியவை. அதனால் செயல்திறன் அதிகம் என்றாலும் இதில் எரிபொருள் கிடைப்பது விலை உயர்ந்ததாகும். ஆனால் இதில் எரிபொருளை நிரப்பினால் சராசரியாக ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யக்கூடியவை. ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் இந்த முடிவிற்கு ரஷ்யா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கண்டிப்பாக இருநாட்டு பீரங்கிகளும் உக்ரைனில் எரிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.