நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குருசாமி பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது இங்குள்ள விடுதியில் 25 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலை விடுதியில் சாப்பிட்டுவிட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில் திடீரென வயிறு வலி ஏற்பட்டு வாந்தி எடுத்து மயங்கி விழுந்த 9 மாணவர்களை ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் டாக்டர்கள் விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு சென்ற மாணவர்களை பரிசோதனை செய்தனர். இந்நிலையில் தரமற்ற உணவு வழங்கியதால் தான் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அறிந்த ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் மாணவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.