மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பள்ளி மாணவியிடம் தகாத முறையில் அப்பள்ளியின் பேருந்து ஓட்டுனர் ஒருவர் நடந்துள்ளார். இதனை கடந்த 22 ஆம் தேதி அந்த மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி விரைந்து வந்த காவல் துறையினர் பேருந்து ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த சம்பவத்தை அறிந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் 2 பேர் சேர்ந்து அந்த பேருந்து ஓட்டுனரை ரோட்டில் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நீல நிறம் சீருடை அணிந்த ஒருவரை MNS அதிகாரிகள் தாக்கியதாக தெரிகிறது. அப்போது  அருகில் இருக்கும் பெண்கள்  இந்த தகராறை  விலக்கியுள்ளனர்.