இனிமேல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கணக்கு அறிக்கைக்காக அதாவது, பேங்க் ஸ்டேட்மெண்ட் எடுப்பதற்கு வங்கிக்கு போக வேண்டிய அவசியமில்லை. இச்சேவையை வாடிக்கையாளர்கள் இனிமேல் ஆன்லைன் வாயிலாக பெறலாம். அதன்படி, பாஸ்புக்கை என்ட்ரி செய்யவேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் தற்போது வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அனைத்து தகவல்களையும் புதுப்பிக்கலாம்.

வங்கிகள் இச்சேவைக்கு ஒரு குறிப்பிட்ட எண்களை வழங்கியுள்ளது. இந்த எண்களை அழைப்பதன் வாயிலாக இச்சேவைக்கு உங்களது எண்ணை பதிவு செய்யலாம். 1800 1234 மற்றும் 1800 2100 என்ற கட்டணம் இல்லா எண்ணை தொடர்புகொள்ளலாம். அதன்பின் கணக்கு இருப்பு மற்றும் பரிவர்த்தனை விபரங்களை பெற 1-ஐக் கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக உங்களது வங்கிக்கணக்கு எண்ணின் கடைசி 4 இலக்கங்களை உள்ளிடவும்.

பின் கணக்கு அறிக்கையை பெறுவதற்கு 2-ஐ அழுத்தவேண்டும். அதனை தொடர்ந்து அங்கிருந்து வங்கி அறிக்கை காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி, நீங்கள் வங்கி அறிக்கையை தேடும் காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்ததாக வங்கி அறிக்கை உங்களின் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் ஐடி (அ) தொலைபேசி எண்ணிற்கு வங்கி மூலம் அனுப்பப்படும்.