
எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி அம்ரித் கலாஷ் என்ற Fixed Deposit திட்டத்தினை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அதன்படி FD டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு இது 7.6% ஆக வழங்கப்படும். இந்த பிக்சட் டெபாசிட் திட்டமானது 400 நாட்கள் அவகாசம் கொண்டது. ஜூன் 30 வரை இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.