
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாக்காளர் பட்டியலில் ஒரே மாதிரியான போலி எண்கள் மூலம் பாஜக சதி செய்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டில் மேற்குவங்க மக்களின் வாக்காளர் அடையாள அட்டையில் EPIC நம்பர், ஹரியானா, குஜராத் மற்றும் பஞ்சாப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாக்காளர் EPIC நம்பரும் ஒரே மாதிரியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதில்,”ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் கிடையாது. EPIC என்னானது ஒவ்வொரு வாக்காளருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படக்கூடிய 10 இலக்க எண்ணாகும்.
EPIC எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவரவர் பிறந்த தேதி, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி ஆகிய விவரங்கள் மாறுபாடு அடைந்திருக்கும். எனவே ஒரே மாதிரியான எண்களை உடைய வாக்காளர் அட்டை இருந்தாலும் ஒவ்வொருவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்களிக்க முடியும்”என விளக்கம் அளித்துள்ளது.