
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா மயோசிட்டிஸ் நோயிலிருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளார். 8 மாதங்களாக இந்த நோயால் சிரமப்பட்டு வந்த இவர், மீண்டுமாக பழைய நிலைமைக்கு திரும்பி படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக சமந்தா நடிப்பில் யசோதா படம் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சமந்தா நடிப்பில் சாகுந்தலம் படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகிறது.
இதனிடையே போட்டோஷூட்டில் ஆர்வம் கொண்ட சமந்தா அவ்வப்போது தன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு போட்டோஷூட் நடத்தியுள்ளார் சமந்தா. இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
#Shaakuntalam 🤍#ShaakuntalamOnApril14
Let’s talk all things #Shaakuntalam pic.twitter.com/m0yPpzpzcD— Samantha (@Samanthaprabhu2) March 21, 2023