தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கஸ்டடி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். விவாகரத்துக்கு பிறகு தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக அடிக்கடி இருவரும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களும் வெளியாவது உண்டு. அந்த வகையில் தற்போது லண்டனில் ஒரு உணவகத்தின் செஃப்புடன் சேர்ந்து நடிக்க நாக சைதன்யா புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகை சோபிதா துலிபாலா ஒரு சேரில் பின்னால் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் நாக சைதன்யாவும் சோபிதாவும் லண்டனில் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது.