தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்க, சஞ்சய் தத், அர்ஜுன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தை அட்லீ அல்லது எச். வினோத் இயக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்தை யார் இயக்குனாலும் ஹீரோயின் சமந்தா தான் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவை விஜய் தரப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தளபதி 68 திரைப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்தால் விஜய் மற்றும் சமந்தா இணையும் 4-வது படமாக அது அமையும்.