தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது நீல் என்ற ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிகை காஜல் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய கணவருடன் சேர்ந்து கலந்து கொண்டுள்ளார். அப்போது படு கவர்ச்சியான உடையை காஜல் அகர்வால் அணிந்துள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.