
கோலிவுட் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். தற்போது இவர் கதிரேசன் டைரக்டில் உருவாகி இருக்கும் “ருத்ரன்” படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் ருத்ரன் படத்தின் சூட்டிங் நிறைவு பெற்றதை படக்குழு ஸ்பெஷல் வீடியோவுடன் அறிவித்து உள்ளது. அதில் நடிகர் சரத்குமார் தன் மிரட்டலான குரலில் பேக் அப் என கூற அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சியடைந்தனர். அந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
#RUDHRAN : It's WRAP🔥🔥🔥
Stars : Raghava Lawrence – Sarath Kumar – Priya Bhavani Shankar
Music : G V Prakash (Asuran)
Direction & Production : KathiresanAPRIL 14 2023 Release.pic.twitter.com/VCwPNmfoM7
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 5, 2023