
நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பாக நேற்று நடந்த பிரதிபாடா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பின்னர் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களின் நினைவிடம் ஆன டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்கு சென்று அங்குள்ள நினைவிடங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனை அடுத்து ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளை சந்தித்து உரையாடிய மோடி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அதன் பின் அங்குள்ள குறிப்பு புத்தகத்தில் தனது குறிப்புகளை எழுதினார். இந்தக் குறிப்பில்”இந்த நினைவுச் சின்னங்கள் அனைத்தும் இந்திய கலாச்சாரம், தேசியவாதம் மற்றும் அமைப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன”என எழுதினார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,”ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்தியாவின் அழியாத கலாச்சாரம் மற்றும் நவீனத்துவத்தின் ஆலமரம். ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் நாட்டின் பல்வேறு துறைகளில் தன்னலமின்றி தங்களது பணிகளை செய்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் இன் லட்சியங்களும், கொள்கைகளும் தேசிய உணர்வை பாதுகாக்கும் சேவையின் மறுபெயர் தான் ஆர்.எஸ்.எஸ்” என புகழ்ந்து உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற 11 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்.எஸ்.எஸ் நிறுவனத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதைத்தொடர்ந்து மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மாதவ் ராவ் கோல்வால்கரின் பெயரில் அமைக்கப்பட்ட கண் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய விரிவாக்க கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய தீக்ஷா பூமிக்கும் சென்று தனது மரியாதையை செலுத்தினார்.