
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் கடந்த 2022ம் ஆண்டு ட்விட்டர் தளத்தை வாங்கினார். அதன் பின், ட்விட்டர் தளத்தை, எக்ஸ் என்று பெயரை மாற்றி நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது Open AI நிறுவனம் மீது ஆர்வம் காட்டியுள்ளார். இதன் சிஇஓ-வாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். கடந்த 2015ல் ஓபன் ஏஐ நிறுவனத்தை எலான் மாஸ்க் மற்றும் சாம் ஆல்ட்மேன் ஆகிய இருவரும் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எலான் மஸ்க் அதிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் மீண்டும் எலான் மஸ்க் மற்றும் அவரது குழு Open AI வாங்க ஆர்வம் காட்டுயுள்ளார். அதனை 97.4 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க அவர்கள் ப்ரொபோஸ் செய்தனர். ஆனால் இந்த ப்ரொபோஸை அந்நிறுவனம் நிராகரித்துள்ளது. அந்நிறுவனம் விற்பனைக்கு இல்லை என்று அதன் தலைவர் பிரட் டெய்லர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இதுகுறித்து சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் வலை பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, வேண்டாம்.. நன்றி.. வேண்டுமென்றால் எக்ஸ் தளத்தை 97.4 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம் என்று கிண்டலாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.