கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில்  அந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தவறுதலாக தனது கைப்பையை பேருந்திலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் இளங்கோ மற்றும் நடத்துனர் வரதராஜ பெருமாள் பணத்தை எடுத்து உரிய நபரை கண்டறிந்த அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த கைப்பையில் ரூ.73 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது. பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.73 ஆயிரம் பணத்தை மீட்டுக் கொடுத்த ஓட்டுநர் மற்றும் நடத்தினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.