பிளிப்கார்டு பிக் சேவிங் டேஸ் 2023 விற்பனை தற்போது துவங்கியுள்ளது. இந்த விற்பனை ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 20 ஆம் தேதி(நாளை) வரை நடைபெறும். இவ்விற்பனையில் ஸ்மார்ட் போன்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனையில் இப்போது ஐபோன் விற்பனை டிரெண்டில் இருக்கிறது. அதாவது, விற்பனையில் ரூபாய்.60,000 மதிப்பிலான ஐபோன் வெறும் ரூ.18,000க்கு கிடைக்கும். ஐபோன் 12 மினியின் அறிமுக விலையானது ரூ.59,900 ஆகும்.

இருப்பினும் பிளிப்கார்ட்டில் இது ரூ.38,999க்கு கிடைக்கிறது. இதையடுத்து பல வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் இதில் கிடைக்கிறது. அதன்படி ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஐபோன் 12 மினி வாங்கினால், ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். அதன்பின் போனின் விலை ரூபாய்.37,999 ஆக குறையும். ஐபோன்-12 மினியில் ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது பழைய ஸ்மார்ட் போனை மாற்றிக்கொண்டால், இத்தள்ளுபடியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இருந்தாலும் இந்த பரிமாற்ற சலுகையை பயன்படுத்திகொள்ள தங்களது பழைய போனின் நிலை நன்றாக உள்ளதையும், போன் லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் வாடிக்கையாளர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும். அப்போது தான் இத்தள்ளுபடியை பயன்படுத்திக்கொள்ள முடியும். பரிமாற்ற சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000 தள்ளுபடி கிடைக்கும். இந்த அனைத்து சலுகைகளையும் பயன்படுத்திக் கொண்டால் போனின் விலையானது ரூ.17,999 ஆக குறைந்து விடும்.