நடுத்தர மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யக்கூடிய நிதி பட்ஜெட்டில் 15 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் இருந்து வரி குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஒரு வருடத்திற்கு 3 லட்சம் முதல் 15 லட்சம் வரை வருமானம் பெரும் நடுவர்க்க குடும்பத்தினருக்கு 5% முதல் 20% வரை வருமான வரி கட்ட வேண்டியிருக்கும். அதிகபட்சமாக 30% வருமான வரி விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அரசு அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது.

நடுத்தர குடும்பத்தினர் பொருளாதார நிலையை சரிகட்டும் வகையிலும் அரசு இந்த முடிவை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி செலுத்தும் பொதுமக்கள் இரண்டு முறைகளை பயன்படுத்த முடியும். ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வீட்டு வாடகை மற்றும் இன்சூரன்ஸ் விதிவிலக்கு. இல்லையெனில் 2020 இல் அறிமுகம் செய்யப்பட்ட வரி செலுத்தும் முறை. இந்த இரு முறைகளில் வரி சற்று குறைக்கப்படலாம் ஆனால் அதிகப்படியான விதிவிலக்கு கிடையாது.

அரசு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இது தொடர்பான முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருமான வரி குறைப்பால் அதிகமான மக்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 லட்சத்திற்கு அதிகமாக வருடம் வருமானம் பெறுபவர்களுக்கு 30% வரி விதிக்கப்படும்.