மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சொன்னோம்.  நடக்குதுன்னு சொல்றாங்க…..  ஆனா எங்கேயும் நடந்த மாதிரி எனக்கு தெரியல. ஊடக நண்பர்கள் உங்களுக்கு தெரிஞ்சு தா? அதே போல சாலைகள்….  நீர்த்தேங்காத சாலைகள்… இங்கே  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலையில்  தண்ணீர் தேங்கக்கூடிய ஒரு சூழ்நிலையை  நாம் பார்க்கிறோம். அந்த சாலையில் மண்ணை  போடுறாங்க.  அது ஒரு மழை பெஞ்சா மறுபடியும் கரைச்சிரும். அது எதற்காக ? ஒரு கண் துடைப்பு நாடகமா செய்றதாக அங்கே இருந்த  மாநகராட்சி ஆணையர் அவர்களிடமும்  சொல்லியுள்ளோம்.

இது ஒரு நிரந்தர தீர்வாக இருக்காது.  இது மேலும் பிரச்சனையை தான் உருவாக்கம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தடை செய்யப்பட்டிருக்கின்ற முதியோர் ஓய்வூதியத்தை உடனடியாக கொடுக்க வேண்டும். அதேபோல நிவாரணங்கள்…  இப்ப விவசாயிகளுக்கு நிறைய இடங்களில் பார்த்தீங்கன்னா…    தானியங்கள் எல்லாம் அறுவடை செய்கிற நேரத்துல…

ஒன்னு தேவைக்கு அதிகமா விளைஞ்சி விலை  கிடைக்க மாட்டேங்குது… விலை கிடைக்கின்ற நேரத்துல விளைய மாட்டேங்குது.  உழவன்  கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது  என்பது மாதிரி விவசாயிகளெல்லாம் கண்ணீரில் இருக்கிறார்கள். இந்த  சூழ்நிலையை யார் பாதுகாப்பது ? அரசு தான் என தெரிவித்தார்.