இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த ஊழல் ஆட்சி, சாராய ஆட்சி, அராஜக ஆட்சி முடிவுக்கு வரவேண்டும்.  மேதகு ஆளுநர் அவர்களை அவமதிக்கின்ற இந்த ஆட்சி…  மேத ஆளுநர் எங்கே போனாலும் நல்லா பேசுறாரு, சனாதன இந்து தர்மத்தின் பெருமை பேசுறாரு.

வள்ளலார் உடைய பெருமையை பேசுறார்.  தமிழின் பெருமையை பேசுறாரு. இந்த தமிழகத்திலே ஒரு தலைசிறந்த ஆளுநராக அவர் இருக்கிறார். லஞ்ச ஊழலை அவர் அனுமதிக்க மாட்டார். எனவே இந்த தமிழகத்திலே இந்த திராவிட மாடல்  ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்… இந்த சாராய ஆட்சிக்கு. இந்த ஆட்சில விலைவாசி எப்படி விக்குது ? ஒரு தக்காளி விலையை  கண்ட்ரோல் பண்ண முடிஞ்சிதா ? ஒரு வெங்காய விலை…

எவ்வளவு விலைவாசி உயர்வு, எவ்வளவு மின் கட்டணம் உயர்வு,  எவ்வளவு சொத்து வரி உயர்வு, சாதாரண மக்கள் வாழ முடியாத ஒரு சூழலை உருவாக்கி இருக்கிறார். எங்கே போனாலும் லஞ்சம். எதுக்கு போனாலும் கமிஷன்.  அன்றாடம் கனிம வள கொள்ளை.

காஞ்ச மாடு கம்புக்குள்ள போன மாதிரி…  நிறைய சீனியர் மினிஸ்டர் கேட்குறான்….   அட ரெண்டு வருஷத்துல 30 ஆயிரம் கோடி இவங்க குடும்பம் மட்டும் மகன் – மருமகன் சம்பாதிச்சுட்டாங்களே,  நிதி அமைச்சரே டெலிபோன்ல சொல்லிட்டாரு. அதை பதிவு பண்ணி,  அதை நம்முடைய அண்ணாமலை வெளியிட்டார். இப்ப சீனியர் மினிஸ்டர் எல்லாம் யோசிக்கிறான். இன்னும் நம்ம நிச்சயமா அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது.

இந்த ஆட்சி எப்ப வேணாலும் கலைச்சிடுவாங்க.  அதனால வாய்ப்பு கிடைக்கிற இடத்தில் எல்லாம் திருடுவோம். இந்த மந்திரிகள்..  இன்னைக்கு வாய்ப்பு கிடைக்கின்ற வாய்ப்பு கிடைக்கின்ற இடத்தில் எல்லாம் அவங்க, அவங்க சொத்து சேர்க்கும் வழியை பார்த்துகிட்டு இருக்காங்க என தெரிவித்தார்.