பிரபல விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை 8 எபிசோடுகளை வெற்றி கரமாக கடந்துள்ளது. திரை உலகில் பல பாடகர்களை அறிமுகப்படுத்தி வைத்த பெருமையும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சேரும். இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மற்றும் ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது இசையமைப்பாளர் சாம் சி.எஸ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான தேர்வில் தான் கலந்து கொண்டதாகவும் ஆனால் ரிஜெக்ட் ஆனதாகவும் கூறியுள்ளார். அதோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால் பாடகர் ஆகலாம் எனவும் இல்லை என்றால் என்னை போன்ற கம்போசர் ஆகலாம் எனவும் ஒருவர் கூறியதாகவும் கூறியுள்ளார். இதேபோன்று ஆர் ஜே பாலாஜியும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரிஜெக்ட் ஆனவர் தான். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரிஜெக்ட்டான இருவர் தற்போது அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்தது ஹைலைட்டாக மாறியுள்ளது.