நெல்லையை சேர்ந்த செல்வம் என்பவர் 2019 ஆம் வருட முதல் சேவல் ஒன்றை வாங்கி வீட்டில் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இந்த சேவலானது சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் செல்வம் மனம் உடைந்துள்ளார்.

சிங்கம் என்று பெயரிடப்பட்ட தன்னுடைய சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் மற்றும் போஸ்டர் தயார் செய்து தன் வசிக்கும் பகுதியில் பல இடங்களில் வைத்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.