ஏர்டெல் பயனாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஏர்டெல் தன் திட்டங்களின் விலையை நடப்பு ஆண்டு மீண்டும் அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. 2023ம் வருடத்தில் அனைத்து திட்டங்களிலும் மொபைல் போன் அழைப்பு மற்றும் தரவு கட்டணங்களை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது திட்டங்களுக்கான தொகையை அதிகரித்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தின் இம்முடிவு பற்றி செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் சார்பாக அதிககாரப்பூர்வமாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிறுவனம் அதன் குறைந்த விலை திட்டத்தை சென்ற மாதம் 57% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 8 வட்டங்களில் ரூபாய்.155 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். முந்தைய ரூபாய்.99 திட்டத்தில், 200 எம்பி டேட்டா மற்றும் அழைப்புகள் வினாடிக்கு 2.5 பைசா என்ற விகிதத்தில் வழங்கப்பட்டது.

மொபைலை ஆக்டிவ்வாக வைத்திருக்க மட்டும் ரீசார்ஜ் செய்து கொண்டிருந்தவர்களுக்கு இத்திட்டம் டென்ஷனை கொடுக்கலாம். நிறுவனத்தின் ARPU இலக்கு ரூபாய்.200. அதை ரூ.300 ஆக அதிகரிப்பது தான் நிறுவனத்தின் இலக்கு ஆகும். ஆரோக்கியமான இருப்பு நிலை இருந்தாலும் தொலைத்தொடர்பு துறையில் வருமானம் மிகக்குறைவு. எனவே நிறுவனத்தை லாபகரமானதாக மாற்ற கட்டணங்களை அதிகரிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்று கூறப்படுகிறது.