நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களை நிர்வாணமாக சித்தரித்து அவற்றை இணையதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் லீக் ஆன அல்லது நாமே தெரியாமல் பதிவிட்ட ஆபாச படங்களை நீக்க புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. Take it downஎன்ற இந்த வசதியின் மூலம் நாம் வேண்டாம் என்று நினைக்கும் எந்த போட்டோவையும் இணையத்தில் இருந்து நீக்க முடியும். பேஸ்புக்கில் இந்த புதிய அப்டேட்டை  மெட்டா நிறுவனம்  வழங்கியுள்ளது. இதுவரை இன்ஸ்டாகிராம், பேஸ்புக், onlyfans உள்ளிட்ட வெப்சைடுகள் இந்த வசதிக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால் ட்விட்டர் இதற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டது