
சர்வதேச போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் அவருக்கு பதிலாக இளம் ஆள்ரவுண்டரான தனுஷ் கோட்டியான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பார்டர்- கவாஸ்கர் தொடரின் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஆள் கவுண்டர் தனுஷ்கோட்டியான் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதில் யாரும் எதிர்பாராத வநேரத்தில் இந்திய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ஓய்வை அறிவித்ததால் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் கடைசி 2 போட்டிகளில் விளையாட மும்பையை சேர்ந்த 26 வயதான இளம் வீரர் தனுஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் அக்சர் படேல் தான் அணியில் இடம்பெற அழைக்கப்பட்டு இருந்ததாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாக அணியில் இடம்பெற போனதால் தனுஷ்கோட்டியனுக்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷ் வலது கை ஆல் ஸ்பின்னர் ஆவார். சமீபத்திய காலங்களில் பேட்டிங்கிலும் அவர் அசத்தி வருகின்றார். 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக இவர் விளையாடி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2023- 2024 ரஞ்சி டிராபி தொடரில் தனுஷ் தொடர் நாயகன் விருதினை பெற்றதோடு அதில் மொத்தமாக 29 விக்கெட்டுகளையும், 52 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும் ரஞ்சித் டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் அவர் அணியின் முக்கிய வீரராகவும் உள்ளதோடு ரஞ்சி டிராபி தொடரில் மட்டும் இதுவரை 2 சதங்கள், 13 அரை சதங்கள் உட்பட 1525 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 33 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள தனுஷ் 15 25 ரன்களை குவித்துள்ளார். மேலும் 101 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அவரது பேட்டிங் சராசரி 41.21 என்று மிக சிறப்பான ஒன்றாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.