கலிபோர்னியாவில் உள்ள தீவு ஒன்றில் அமைந்துள்ள சான்பிரான்சிஸ்கோவின் பிரபல சுற்றுலாத்தலங்களில் ஒன்று அல்காட்ராஸ் சிறைச்சாலை. இந்த சிறைச்சாலை அமெரிக்காவில் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடைத்து வைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த 1983இல் இச்சிறைச்சாலை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது சான்பிரான்சிஸ்கோவில் உள்ள அல்காட்ராஸ் சிறைச்சாலை மீண்டும் திறக்க உள்ளதாக முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் கூறியதாவது, அமெரிக்கா நீண்ட காலமாக கொடிய மற்றும் வன்முறை குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அல்காட்ராஸ் சிறைச்சாலையை சீரமைத்து திறக்க உத்தரவிட்டுள்ளேன்.

அல்காட்ராஸ்  சிறைச்சாலை திறப்பதால் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி அமெரிக்காவில் பாதுகாக்கப்படும். இந்த சிறைச்சாலை திறக்க சிறைத்துறை, நீதித்துறை, எஃப்.பி.ஐ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் நடைபெறும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றங்கள் குறையும் என தெரிவித்துள்ளார்.