இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறைகள் லைக்குக்காக வித்தியாசமான வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி புகையிலைக்கு எதிராக ரிலீஸ் போடுங்க ரியல் ஹீரோவா ஆகுங்க என்ற தலைப்பில் நடந்த போட்டிக்கான பரிசு அளிப்பு விழாவில் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது, வெறும் லைக்ஸ் மற்றும் வியூசுக்காக இளம் தலைமுறையினர் உயிரையே பணயம் வைப்பதாகவும் பணம் கிடைக்கிறது என்பதற்காக அற்பத்தனமான விஷயங்களை பலரும் செய்து வருவதாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். திருச்சியில் தனியார் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் புகைப்படத்திற்கு எதிராக ஒரு திரைப்படத்தை எடுப்பேன் என்று கூறினார்.