பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வேயானது அவ்வப்போது பல்வேறு புது சேவைகளை துவங்கியுள்ளது. கடந்த சில வருடங்களில் உணவு பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதற்கும் ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முன்பே பயணிகளுக்கு ஆன்லைன் வாயிலாக உணவு வழங்கும் வசதி, ரயில்வேயில் இருக்கிறது.

இந்நிலையில் வாட்ஸ்அப் வாயிலாக உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே துறையானது பயணிகளுக்கு வழங்கி உள்ளது. அதாவது, இ-கேட்டரிங் சேவை வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அடிப்படையில் ரயில்வேயால் இம்முயற்சி தொடங்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று உணவு ஆர்டர் செய்ய ரயில்வேயில் வாட்ஸ்அப் எண்ணும் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ரயில்வே தன் இ-கேட்டரிங் சேவையை வாடிக்கையாளர்களுக்கு IRCTC வாயிலாக வழங்குகிறது. ஆகவே பயணிகள் இந்த இ-கேட்டரிங் சேவை வாயிலாக தங்களின் உணவை வாட்ஸ்அப் தொடர்பு சேவை மூலம் ஆர்டர் செய்யலாம். இதற்கென பிசினஸ் வாட்ஸ்அப் எண் +91-8750001323 பயணிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது