
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்த டாப்சி இப்போது இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக உயர்ந்து உள்ளார். மேலிம் பத்லா, பேபி, நாம் ஷபானா, சபாஷ் மிது உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் வாயிலாக தன் திறமையை வெளிப்படுத்தி இந்தி பட உலகில் தன் மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறார் டாப்சி.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் “ரசிகர்கள் சினிமாவில் தினசரி புதுமையை எதிர்பார்க்கின்றனர். நான் நடிக்கும் திரைப்படங்கள் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டே வருகிறது. எல்லா நேரத்திலும் ரசிகர்களை திருப்திப்படுத்துவது சாத்தியமில்லை” என்று அவர் கூறினார்.