சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த தேவா என்ற 28 வயதான இளைஞர், கடையில் சிக்கன் பக்கோடா சாப்பிடுவதற்காக வந்த சத்யா ஜித்தேந்தர் மற்றும் அவரது மனைவியுடன் தகராறு செய்து, பெரும் கலவரத்தை ஏற்படுத்தினார். குடிபோதையில் இருந்த தேவா, சத்யாவை கிண்டல் செய்து, அவரது மனைவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து தகராறு செய்துள்ளார். இதனால் சத்யா தனது மனைவியை வீட்டில் விட்டுவிட்டு நண்பர்களுடன் தேவாவை தாக்க சென்றுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில், சத்யா, முத்துவேல் மற்றும் லோகேஷ் ஆகியோர் தேவாவை மரக்கட்டை மற்றும் கற்களை கொண்டு தாக்கி, அவரை மிக மோசமாக காயப்படுத்தினர். காயங்களால் சிதைந்து மயங்கிய தேவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு முதுகு மற்றும் தலைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, திருவிக நகர் போலீசார் 6 பேரை கைது செய்தனர்.  சத்யா ஜித்தேந்தர்(23), முத்துவேல்(23), லோகேஷ்(23), கோவிந்தராஜ்(24), பாலாஜி(22) மற்றும் கோபி(26) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.