
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. இவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தன் வீட்டின் லாக்கரிலிருந்த விலை உயர்ந்த நகைகள் திருடப்பட்டு இருப்பதாக போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன்பிறகு ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா கல்யாணத்தின் போது எடுத்த ஆல்பத்தையும் போலீசாரிடம் ஐஸ்வர்யா கொடுத்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆபரணங்கள் தான் திருடப்பட்டிருப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வேலைக்கார பெண்ணான ஈஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு கார் டிரைவர் வெங்கடேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து ஏராளமான தங்க நகைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈஸ்வரி ஐஸ்வர்யாவின் வீட்டில் திருடிய நகைகளை வைத்து ஒரு சொகுசு வீடு வாங்கியதோடு தன்னுடைய கணவர் மற்றும் மகளுக்கு காய்கறி கடை வைத்துள்ளதும் ஒரு மகளுக்கு திருமணம் செய்து வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய வினால்க் சங்கர் நாவாலி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஈஸ்வரி தனுஷ் மற்றும் ரஜினியின் வீட்டிற்கும் அடிக்கடி சென்று வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அங்கும் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில் விசாரணையை முடிக்கி விட்டதோடு ஐஸ்வர்யா வீட்டின் லாக்கரையும் சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.