ஆரம்ப காலங்களில் இருந்து இப்போது வரை ரஜினி, கமல் இருவருக்கும் திரையில் போட்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படமும் கமலின் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஜெயலலிதா திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆவதால் ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது. இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகம் 27 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்ததால் இந்த முறை ரஜினியுடன் கமல் பலமாகவே மோதுகிறார். ஆகையால் 18 வருடங்களுக்கு முன்பு ரஜினியிடம் தோற்ற கமல் தற்போது வெற்றியை ருசிப்பதற்காகவே நேருக்குநேர் மோதுவதாக சொல்லப்படுகின்றது.