
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ராஜமவுலி. இவர் பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். தற்போது ராஜமவுலி தன்னுடைய 29-வது பட வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னருடன் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார்.
இந்த விளம்பர படம் தற்போது இணையதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த விளம்பர படத்தில் வரும் காட்சிகள் நகைச்சுவையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள் டேவிட் வார்னர் இந்திய சினிமாவில் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
The longest shoot of my life.😉 #CREDad @davidwarner31
— rajamouli ss (@ssrajamouli) April 12, 2024