தமிழகத்தில் மார்ச் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் மார்ச் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் இன்று முதல் மார்ச் 10-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வருகின்ற 11-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்றும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.