குஜராத்தில் உள்ள ஜி எம் ஆர் எஸ் மருத்துவக் கல்லூரி மாணவன் ராகிங் காரணமாக உயிர்‌ இழந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனில் மெத்தானியா (18) மருத்துவ படிப்பில் சேர்ந்து முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சனிக்கிழமை இரவு 8 மணிக்கு மூத்த மாணவர்களைக் கொண்ட ஒரு குழு ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்து கொடுமைப்படுத்தினர். இந்த ராகிங்கிள் ஏறக்குறைய 3 மணி நேரம் தொடர்ச்சியாக நின்று கொண்டு தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு அந்த மூத்த மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை வற்புறுத்தி உள்ளதாக நேரில் பார்த்தவர் தெரிவித்தனர்.

அந்த குழுவில் இருந்த மெத்தன்யா மயக்கம் அடைந்து மயங்கி கீழே விழுந்துள்ளார் உடனடியாக அக்கம்பக்கத்தினர் அந்த மாணவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தார். இது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளது என அந்தக் கல்லூரி நிறுவனத்தின் டீன் டாக்டர் ஹர்திக் ஷா தெரிவித்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து மாணவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவத்தை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

மாணவனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவித்தனர் என இறந்த மாணவரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர் மேலும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்தனர்.