நாடு முழுவதும் இதுவரையிலும் மொத்தம் 8 வந்தேபாரத் ரயில்களானது இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் இந்தியாவில் முதல் முறையாக சென்னை-பெங்களூரு-மைசூரு இடையில் வந்தே பாரத் ரயில் சேவையானது துவங்கப்பட்டது. வந்தே பாரத் ரயில் திட்டத்தின் கீழ் வரக்கூடிய பாரத் ரயில்கள் 503 கி.மீ தொலைவை சுமார் 6:30 மணிநேரத்தில் கடக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டிணத்துக்கு கடைசியாக ரயில் இயக்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் படி மேலும் 3 ரயில்களை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்பே “மிஷன் சவுத்” திட்டம் துவங்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது.

அந்த அடிப்படையில் தெலுங்கானாவின் கச்சேகுடாவில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு வரையும், தெலங்கானாவின் செகந்தராபாத்தில் இருந்து ஆந்திராவின் திருப்பதி வரையும், திருப்பதியில் இருந்து மகாராஷ்டிராவின் புனே வரையும் புது ரயில்கள் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.