
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காமியா கார்த்திகேயன்(17) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நேவி சில்ட்ரன் என்ற பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் இந்த வயதில் உலகின் 7 கண்டங்களில் உள்ள மிகப்பெரிய சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். அதாவது ஆப்பிரிக்காவின் மவுண்ட் கிளிமஞ்சாரோ, ஐரோப்பாவின் மவுண்ட் எல்ப்ரஸ், ஆஸ்திரேலியாவின் மவுண்ட் கோஸ்கியுஸ்கோ, தென் அமெரிக்காவின் மவுண்ட் அகோன்காகுவா, வட அமெரிக்காவின் மவுண்ட் டெனாலி, மற்றும் ஆசியாவின் எவரெஸ்ட் சிகரம் ஆகியவற்றின் சிகரங்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் கடந்த டிசம்பர் 24ம் தேதி அன்று சிலி நேரப்படி 1720 மணி நேரத்தில் தனது தந்தை சி டி ஆர் எஸ் கார்த்திகேயன் என்பவருடன் சேர்ந்து அண்டார்டிகாவில் உள்ள வின்சென்ட் மலை உச்சியை அடைந்தார் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இந்த சாதனையை படித்த காமியா கார்த்திகேயன் மற்றும் அவரது தந்தைக்கும் இந்திய கடற்படை வாழ்த்து தெரிவித்துள்ளது.
🌟 Breaking barriers and reaching new heights! 🌍
Ms. Kaamya Karthikeyan, Class XII, Navy Children School, Mumbai, becomes the youngest female in the world to conquer the Seven Summits—the highest peaks on all seven continents! 🏔️👏 A moment of immense pride for NCS Mumbai! pic.twitter.com/hexkw9r2u6— NAVY CHILDREN SCHOOL MUMBAI (@IN_NCSMumbai) December 28, 2024