சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே திருமுல்லைவாயில் பாரதி நகரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது வீட்டின் அருகே மழை நீர் வடிகால் குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழாயினுள் நாய்க்குட்டிகள் தவறி விழுந்துள்ளது. இதனால் பரிதவித்துக் கொண்டிருந்த தாய் நாய் அழுகுரலில் கத்திக்கொண்டே இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் அங்கு சென்று பார்த்த போது வடிகால் குழாயினும் நாய்க்குட்டிகள் சிக்கியிருந்ததை கண்டனர்.

உடனே ட்ரில்லிங் இயந்திரங்கள் மூலம் அந்த குழாயை உடைத்து உள்ளிருந்த 5 குட்டிகளையும் ஒவ்வொன்றாக மீட்டனர். ஆனால் அதில் ஒரு நாய்க்குட்டி இறந்த நிலையில் கிடந்தது. மற்ற நாய்க்குட்டிகளை கண்ட தாய் நாய் அவற்றை தனது நாவினால் நக்கி தனது பாசத்தை வெளிப்படுத்தியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.